. . .

வேளாண்மை பார்க்கலாம் – வேலை கொடுக்கலாம்!

 

ந்தியா அதிக அளவில் இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளில் ஓன்றாகும். நம் நாட்டின் விலை மதிப்பில்லாத சொத்துக்கள், நம் இளைஞர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய நம்பிக்கை. அவர்கள் அனைத்து துறைகளிலும் திறமை மற்றும் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர். இளமைக்காலம் ஒரு அற்புதமான ஆற்றல்மிக்க நாட்கள். எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே நம் நாட்டின் தூண்கள் ஆவர்.

ஐ. நா. அறிக்கை 2014-ன் படி, மக்கள் தொகையில் சீனா முதல் இடம் பிடித்திருந்தாலும், உலகளவில் அதிக இளைஞர்களை கொண்ட ஒரு நாடு இந்தியாவாகும். சுமார் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள இளைஞர்கள் ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வசிப்பதாக  ஐ. நா. வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் இளைஞர்கள் நகர்புறத்தைக் காட்டிலும், கிராமப்புரத்தில் 21/2 மடங்கு அதிகமாக உள்ளனர். அதாவது, சுமார் 30 கோடி இளைஞர்கள் இந்திய கிராமத்தில் வசிக்கின்றனர்.

Kalanipoo Agri entrepreneur

இன்றைய காலக்ககட்டத்தில் வேலையின்மை மற்றும் இடம் பெயர்தல் ஆகிய இரண்டும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாகும். மேல்படிப்பு முடித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமையால், குறைந்த சம்பளத்திற்கும், முறையான வேலைக்கும் செல்ல முடியாமல் இருக்கின்றனர். மேலும் பெருவாரியான இளைஞர்கள் அரசு வேலையை மட்டுமே நம்பி, வேலை கொடுப்பவர்களாக இல்லாமல் வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நம் இளைஞர்களின்  எதிர்காலம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும்.

 

ஆகையால் மேற்க்கூறிய பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு சுய வேலை வாய்ப்பு மட்டுமே. சுயவேலை என்பது தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனால் கிராமங்களை விட்டு நகர்புரங்களுக்கு வேலை தேடி வெளியேறும் இளைஞர்கள் அளவும் குறையும். மேலும் கிராமத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

சுயவேலை என்பது தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனால் கிராமங்களை விட்டு நகர்புரங்களுக்கு வேலை தேடி வெளியேறும் இளைஞர்கள் அளவும் குறையும். மேலும் கிராமத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.    

சுயதொழில் செய்வதற்கு இளம் தொழில் முனைவோருக்கு விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறி நாற்று தயாரித்தல், குளித்தட்டில் நாற்றங்கால் வளர்த்தல், காளான் வளர்ப்பு, பட்டு பூச்சி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், விதை உற்பத்தி செய்தல், உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு, மலை தோட்டப்பயிர்கள் வளர்ப்பு, கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் பெருவாரியான சுயவேலை வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. இத்துறைகளில் சுயவேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டு வெற்றியடையலாம்.

Kalanipoo agripreneurship

தொழில் முனைவோர்களின் முன்னேற்றைத்தைக் கருத்தில் கொண்டு நம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல தொழில் முனைதல் சார்ந்த பயிற்சிகளையும், பல சான்றிதழ் படிப்புகளையும் அளித்து வருகின்றது. ஆகவே, இந்தியாவை ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னேற்றவும், இளைஞர்கள் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் சுய வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 

இளைஞர்களை சுயதொழிலில் ஈடுபடுத்த சில பரிந்துரைகள்:

  • வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில், இளம் தொழில் முனைவோர்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு அதை சார்ந்த தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேளாண்மை ஒரு கட்டாய பாடமாக கொண்டு வரலாம்.
  • வெற்றி பெற்ற இளைஞர்களை முன் மாதிரியாக காண்பித்து மற்ற இளைஞர்களையும் தொழில் முனைதலில் ஈடுபடுத்தலாம்.
  • இளைஞர்களுக்கு நவீன வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலவரங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வண்ணம் பயிற்சி அளிக்கலாம்.

இனி இதன் தொடர்ச்சியாக வேளாண்மையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழில் முனையும் திட்டங்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம்… தொடருங்கள், தொடர்வோம்…


ஆக்கம்:

சு. ஜனனி,

உதவி பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்)

அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, அத்திமுகம், கிருட்டினகிரி – 635105

மு. முருகன்,

உதவி பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்)

அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, அத்திமுகம், கிருட்டினகிரி – 635105

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது