. . .

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்!

ந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும்.

(எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் கொடுப்பட்டுள்ளது)

உரச்சத்துக்கள்பணி

பயன்கள்

குறைந்தால்

கூடினால்

I. தழைச்சத்துநைட்ரஜன் (N)

1.தரைக்கு மேலே உள்ள தாவரப் பகுதியான தண்டு, இலை, பூ, காய், கனி ஆகியவை உருவத்தில் பெரிதாக வளர்க்கிறது.

2. இலைப்பரப்பு பசுமைநிறம் பெறுகிறது.

1. செடி உயரமாக அடர்ந்து படர்ந்து வளர்வதாலும், இலைப்பரப்பில் பச்சையம் நிறைந்திருப்பதாலும், பயிரானது சூரிய ஒளியிலிருந்து ஸ்டார்ச்சை நிறைய தயாரிக்கிறது.

2. பெரிய உருவம் + பசுமைநிறம் = நிறைய ஸ்டார்ச்

நிறைய ஸ்டார்ச்= நிறைய மகசூல்

*செடியின் உயரமும் வடிவமும் சிறிதாகிப் போகும்

* இலைகள் சின்னச் சின்னதாக பசுமைநிறம் குறைந்து காணப்படும்.

* ஸ்டார்ச் தயாரிக்கும் இலைப் பரப்பு கொஞ்சமாக இருப்பதால் மகசூலும் குறைந்து போகிறது.

*மண்ணில் நன்கு மக்கிய எருவினை போடுவதன் மூலமாகவும், தழைச்சத்து உரங்கள் மூலமாகவும், யூரியாவை தெளிப்பதன் மூலமாகவும் சரிகட்டலாம்.

* பயிர் ரொம்ப உயரமாக, பெரிய பெரிய இலைகளோடு, கரும்பச்சையாக வளரும்.

* செல்சுவர் மெலியும், இதனால் பயிர் சாயும்.

* செல்சுவர்கள் மெலிவதாலும் பச்சைஸ்டார்ச் நிறைந்தாலும் பூச்சிகளும் நோய்களும் ஏராளமாக தாக்கும்.

* பயிரின் வயது கூடும், அறுவடைத் தள்ளிப்போகும். ஆகவே, வயதைக் குறைக்கவும் செல்சுவர்களை கனமாக்கி பயிர் சாய விடாமல் தடுக்கவும் மணிச்சத்தையும் சேர்த்து இட வேண்டும்.

 

உரச்சத்துக்கள்பணி

பயன்கள்

குறைந்தால்

கூடினால்

II. மணிச்சத்துபாஸ்பரஸ் (P)

1. தரைக்கு கீழேயுள்ள தாவரப் பகுதியான வேர்ப்பகுதியினை வளர்க்கிறது.

2. பயிரின் செல்சுவர்களைக் கனமாக்குகிறது.

3. இன விருத்தி உணர்வுகளை தூண்டிக் கொடுக்கிறது.

1. வேர்பகுதி வளர்வதாலும், செல்சுவர்கள் கனமடைவதாலும், பயிர் கீழே சாய்ந்து விடாமல் மண்ணிலே நிற்கிறது.

2. வேரானது ஆழமாகவும் படர்ந்தும் செல்வதால், ஆழமான மண்ணிலிருந்தும் கூட நீரையும் உரச் சத்துக்களையும் பயிர் எடுத்துக் கொள்கிறது.

3. இனவிருத்தி உணர்வுகளால் தூண்டப்பட்ட பயிரானது பூக்கிறது, காய்க்கிறது, காய்க்குள் நிறைய மணிகள் உருவாகின்றன.

4. பதர் இல்லாத மணிமணியான விளைச்சல்களுக்கும் பயிரின் வயதைக் குறைக்கவும் பயன்படுகிறது. நிறைய மணிச்சத்து = நிறையவேர் + நிறைய பூ, காய், கனி.

* பழைய இலைகள் கருநீல சாம்பல் நிறத்தில் தோன்றும்.

* வேரினை பிடுங்கி பார்த்தால் தவறான வடிவமைப்பில் (Malformation) இருக்கும்.

* இலையினுடைய சுவாச செயல்பாடு குறையும்.

* தாவரமானது வளரும் பருவத்திலிருந்து இனப்பெருக்கப் பருவத்திற்கு மாறாது. அதாவது காய், கனிகளை தராமல் வெற்றுத் தவரமகவே காணப்படும்.

* முதிர்ந்த பழைய இலைகள் அடர் பச்சை நிறத்தில் தோன்றும். இதனைத் தான் “மறைக்கப்பட்ட பசி” (Hidden Hunger) என்று அறிவியல் ரீதியாக கூறுகின்றோம்.

* இதனால் பூச்சிகளும் நோய்களும் ஏராளமாக தாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

 

உரச்சத்துக்கள்பணி

பயன்கள்

குறைந்தால்

கூடினால்

III. சாம்பல்சத்து பொட்டசியம்(K)

1. நாம் போட்ட உரமானது, பாசன நீரின் மூலமாகவே பயிருக்குள் பசுமையான இலைக்குள் போகிறது. பகலில் இலையில் தயாரிக்கப்பட்ட ஸ்டார்ச் தினசரி இரவில் மற்ற பாகங்களுக்கும் போகிறது. இந்தப் போக்குவரத்துப் பணியைச் செய்வது சாம்பல் சத்தே.

2. இலைகளின் அடியில் உள்ள இலைத் துளைகளை/ இலைத் துளைகளின் ஓரத்தில் உள்ள காப்பு செல்களை மூடித் திறந்து இயக்குகிறது.

1. பகலில் உரமும் நீரும் பசுமையான இலைக்குப் போவதாலும் இரவில் ஸ்டார்ச் பூ, காய், கனி, தண்டு, வேர் போன்ற இதர பாகங்களுக்கும் போவதால் தான் பயிருக்கு உணவு/சத்து கிடைக்கிறது. பயிர் தொடர்ந்து வாழ்கிறது: வளர்கிறது: தான் உண்டது போக எஞ்சியதை விளைச்சலாக சேமிக்கிறது.

2. பயிர் சுவாசிக்க இலைத் துவாரம் அவசியம். அதே சமயத்தில் துவாரம் திறந்தே இருந்தால், ஸ்டார்ச் தயாரிக்க இலைவரை போன நீரும் ஆவியாகிப் போகும். இலைத் துளையை பகலில் மூடி நீராவிப் போக்கை தடுக்கவும். இரவில் திறந்து வைத்து பயிர் சுவாசிக்கவும் உதவுகிறது.

3. நிறைய போக்குவரத்து = நிறைய விளைச்சல் + நிறைய தரம், இலைத்துளை இயக்கம் = வறட்சிக்கு காப்பு.

* போக்குவரத்துப் பணித்திறன் உயரமான பயிர்களுக்கும், ஸ்டார்ச் (விளைச்சல்) நிறையக் குவிக்கும் பயிர்களுக்கும் நிறையவே தேவைப்படுகிறது. குறைந்தால் மகசூலின் அளவும் தரமும் வெகுவாகக் குறைகிறது.

* பயிர்களுக்கு தேவையான சத்து / சக்தி கிடைக்கப் பெறாததால் பயிரின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. பூச்சிகளும் நோய்களும் எளிதில் தாக்குகின்றன.

* இலைத்துளைகள் திறந்திருந்தால்…..

1.கோடைக்காலத்தில் நீராவிப் போக்கு அதிகமாகி செடி வாடும், வறட்சியில் அழியும்.

2.மழைக்காலத்தில் நீர் இலைக்குள் நிறைந்தது. நின்று அழுகிப் போகும்: சுவாசமும் பாதிக்கப்படும்.

* சாம்பல் மற்றும் எருக்களைப் போடுவதாலும், பொட்டாஷ் உரத்தை இடுவதாலும், பொட்டாஷ் உரத்தை தெளிப்பதாலும் சரிக்கட்டலாம்.

* தென்னை போன்று உயரமாக வளரும் பயிர்களும், வாழை, மரவள்ளி போன்ற ஸ்டார்ச்சை நிறையச் சேமிக்கும் பயிர்களும் நிறைய விளைச்சல்தரும்.

* ஸ்டார்ச் சேமிக்கும் பணி விரிவடைவதால், அறுவடை சீக்கிரமே நடக்கும். வயது குறையும்.

* பூச்சி, நோய்களின் பாதிப்பு குறையும். மகசூல் அதன் தரமும் கூடும்.

* பொதுவாக சாம்பல் சத்து கூடுவதால், பயிருக்கு பெரிய பிரச்சனை ஏதுமில்லை.

* ஆனால், பயிரின் ஆரம்ப காலத்திலேயே சாம்பல் சத்து நிறைய்ய இடுவதால், பயிரின் உயரம் குறைந்து போகிறது.

* அளவுக்கு மீறிய சாம்பல் சத்தை உண்டு கொழுத்த கிழங்கு, வாழைப்பழம், அரிசி போன்றவை பருத்து வெடிக்கின்றன. அதனால் தரம் குறைந்து போகலாம்.

* அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!

 

 விவசாயிகள் சுலபமாக புரிந்துகொள்ள

இதோ உரங்களை அரசன் அமைச்சர்களோடு ஒப்பிட்டு விளக்கம் 

 

       சத்துக்களின்                அமைச்சரைவை

அரசன்

தழைச்சத்துநைட்ரஜன் (N)

அரசி

மணிச்சத்து – பாஸ்பரஸ் (P)

போக்குவரத்து துறை அமைச்சர்

சாம்பல்சத்து பொட்டாஷ்(K)

பாதுகாப்புத்துறை அமைச்சர்

கால்சியம்சுண்ணாம்பு (Ca)

அரசனின் உதவியாளர்

துத்தநாகம் – ஜின்க் (Zn)

உள்ளாட்சித்துறை அமைச்சர்

வெளிமச்சத்துமக்னீசியம் (Mg)

பெட்ரோலியத்துறை அமைச்சர்

கந்தகச் சத்து – சல்பர் (S)

பூந்தோட்ட காவல்காரன்

போரான் – (B)

இந்தக் கட்டுரையின் பகுதி 3 படிக்க


கட்டுரையாளர்கள்:

1. முனைவர். .பாபு, இணைப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். தொடர்புக்கு: agribabu74@gmail.com,

அலைபேசி எண் : 9486836801.

2. மு.ஜெயராஜ்உதவிப் பேராசிரியர் (உழவியல் துறை), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், வேலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: jayarajm96@gmail.com

அலைபேசி எண் : 8220851572.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது