. . .

தாவரதிசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள்

தாவர திசு வளர்ப்பு என்பது, கூட்டு தொழில் நுட்பத்தின் மூலம் ஊட்டச்சத்து கொண்ட ஒரு வளர் ஊடகத்தில் தாவர உயிரணுக்கள், திசு மற்றும் தாவரத்தின் உறுப்புகளை வளர்க்கும் முறையாகும்.

திசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள்

ஒரே சீரான உற்பத்தி திறனை காண திசு வளர்ப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

காலநிலை மற்றும் வானிலையை பொருட்படுத்தாமல் நோய் இல்லாத சூழ்நிலையில் ஆண்டு முழுவதும் தரமான தாவர உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

தாவரங்கள் அதிக வீரிய தன்மை மற்றும் அதிக மகசூல் கொண்டிருக்கும்.

நோய்களை தவிர்ப்பதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

திசு வளர்ப்பு முறை முக்கியமாக விதைகள் மூலம் அல்லது தாவர இனப்பெருக்கம் மூலம் சாத்தியமில்லாத அல்லது கடினமாக உள்ள தாவரங்களை வளர்ப்பதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Kalanipoo tissue banana
திசு முறையில் வாழைக் கன்று

திசு வளர்ப்பு முறை அதிகமாக அலங்காரத் தாவரங்கள், காய்கறிகள் மற்றும் பழ கன்றுகளில் நல்ல வணிக வாய்ப்பை அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட பயிறு வகைகளை உற்பத்தி செய்யலாம்.

உப்புத்தன்மை வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்க கூடிய தாவரங்களை உற்பத்தி செய்ய முடியும்.

திசு வளர்ப்பு முறை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரங்கள்

பழத்தாவரங்கள்

வாழை, திராட்சை, முந்திரி, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, சப்போட்டா, தர்பூசணி, கொய்யா, மாதுளை, ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் வகை பழங்கள்.

பணப்பயிர்கள்

கரும்பு, உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளி கிழங்கு.

மலர் தாவரங்கள்

மல்லி, முல்லை, அரளி, காக்கடா, நந்தியாவட்டம்.

நறுமண தாவரங்கள்

மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், கிராம்பு.

மருத்துவ தாவரங்கள்

கற்றாழை, துளசி, ரோஸ்மேரி, ஜெரேனியம்.

அலங்காரத் தாவரங்கள்

கார்னேஷன், லில்லி, லிமோனியம், டிராசீனா, ரோஸ் மினியேச்சர், கெர்பெரா.

மரங்கள்

மூங்கில், பைன், தேக்கு, யூக்லிப்டஸ்.

இந்தியாவில் திசு வளர்ப்பின் மூலம் பலர் கன்றுகளை உற்பத்தி செய்து நல்ல வியாபாரம் செய்து வருகின்றனர். அதில் ஒருவரே கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஈடன் நாற்றுப்பண்ணை வைத்துள்ள ராஜ ரத்தினம் என்பவர். இவர் இலை திசு வளர்ப்பின் மூலம் விவசாயம் சார்ந்த பல கன்றுகளை வருடத்திற்கு லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து வருமானம் கண்டு வருகிறார்.


தொகுப்பு: சே. ஜனனி, முதுநிலை உயிரிதகவலியல் மாணவர், இயற்கை விவசாயத்திலும், வேளாண்‌ தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வமுடையவர். கழனிப்பூ-வின் கட்டுரை ஒருங்கிணைப்பாளர்.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது