. . .

தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர நாம் என்ன செய்ய வேண்டும்?

kalanipoo thennai

 

ருடா வருடம் நமது இந்தியா கட்டாயம் இரண்டு புயல்களையாவது சந்தித்து விடுகிறது. புயலில் மக்களை காப்பற்ற அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. புயல் சமயத்தில் மக்களை இடம் பெயரச் சொல்லிவிடலாம், ஆனால் நமது நிலத்தில் உள்ள மரங்களை என்ன செய்வது? அதுவும் 20 வருடம் 30 வருடம் என பார்த்து பார்த்து வளர்த்திய தென்னை மரங்களை என்ன செய்வது? அதற்கும் தீர்வு காணத் தான் அரசு தென்னை மரக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தென்னை மரக் காப்பீட்டில் தனிப்பயிராக பல தென்னை மரங்களை வைத்து மொத்தமாக சாகுபடி செய்வோர், ஊடுபயிராக தென்னை சாகுபடி செய்வோர், வரப்பின் ஓரத்தில் மட்டும் வளர்ப்போர், வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்போர் (குறைந்தது ஐந்து மரங்களாவது வளர்க்க வேண்டும்) என அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கம் செய்கிறது அரசு.

வேறு சில அடிப்படைத் தகுதில் என்ன என பார்க்கப் போனால், ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் தரும் மரங்களாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்களை காப்பீடு செய்ய முடியாது, மரங்களை காப்பீடு செய்து சரியாக நீர் ஊற்றாமல் வேண்டுமென்றே மரத்தை பட்டுப் போக வைத்தாலும் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவீர்கள்.

குட்டை மற்றும் ஒட்டு ரகம் 4 முதல்15 ஆண்டுகளுக்கும், நெட்டை ரகம் 7 முதல் 60 ஆண்டுகளுக்கும் காப்பீடு செய்யலாம். ஏக்கருக்கு 70 மரங்கள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

மரங்களின் எண்ணிக்கை, வயது, அவற்றின் பராமரிப்பு பற்றிய உறுதி மொழியுடன் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி அங்கு முன்மொழிவு படிவத்தை வாங்கி பூர்த்தி செய்யவும்.

அதனுடன் காப்பீட்டுக்கான நாம் செலுத்தும் தொகையை வரவோலையாக எடுத்து, தென்னை நிலத்தின் சிட்டா, அடங்கல் சேர்த்து வேளாண்மைத் துறை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

coconut kalanipoo

மத்திய அரசு 50% மாநில அரசு 25% விவசாயி மீதி 25% என காப்பீட்டுத் தொகை சேர்த்து விவசாயிக்கு அளிக்க்ப்படுகிறது.

4-15 வயதுடைய ஒரு மரத்திற்கு ₹2.25 மற்றும் 16-60 வயதுடைய ஒரு மரத்திற்கு ₹3.50 விவசாயி செலுத்த வேண்டும்.

4-15 வயதுடைய ஒரு மரத்திற்கு ₹900 மற்றும் 16-60 வயதுடைய ஒரு மரத்திற்கு ₹1750 என காப்பீட்டுத் தொகை விவசாயிக்கு கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு விவசாயி தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

 

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது