. . .

Tag: Paddy

நெற்பயிருக்கு மாற்றாக பாரம்பரிய பனிவரகு சாகுபடி

Kalanipoo kanthan panivaragu

  நம்முடைய முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தவை சிறுதானியங்கள்தான். நெல் சோறு சாப்பிடுவது மட்டுமே கெளரவமாக மாறிப்போன பிறகு திருவிழா, விருந்தினர் உபசரிப்பு என முக்கிய நாட்களில் மட்டும் நெல் சோறு சமைக்கப்பட்டது. காலப்போக்கில், விருந்தாலியாக வந்தவன் வீட்டுக்காரனை விரட்டிவிட்ட கதையாக, சிறுதானியங்களை புறந்தள்ளி முழுமையாக மனிதர்களை ஆக்கிரமித்துவிட்டது நெல். இதன் கூடவே, மனித உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களும் குடியேற ஆரம்பித்து விட்டன. விளைவு, மீண்டும் சிறுதானியங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.   […]

நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழு தொல்லையா? இதோ அதற்கான தீர்வு

  நெற்பயிரில் நடவு முதல் பூக்கும் பருவம் வரை இப்புழுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்புழு ஆங்கிலத்தில் லீப் போல்டர் (அ) லீப் ரோலர் (Cnaphalocrosis medinalis) என்று அழைக்கப்படும். இலையின் அடிப்புறத்தில் இப்புழுவின் முட்டைகள் மஞ்சள் வெள்ளை நிறத்தில் நேர்வரிசையாக காணப்படும். இப்புழுவின் முட்டைக் காலம் நான்கு முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். பின்பு, முட்டையில் இருந்து வெளிர்பச்சை நிற புழுக்கள் வெளியே வரும். அதாவது, இப்பூச்சியின் நான்கு பருவங்களில், முட்டைப் பருவம் முடிவடைந்து […]

வேளாண்மையிலும் சுற்றுச்சூழலிலும் தவளையின் அரும்பங்கு- தவளை என்றொரு இனமுண்டு!

  கொசுக்கள் அதிகமா? நெல் நிலத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமா? இவற்றுக்கு மனிதர்களாகிய நாம் தான் முழு முதல் காரணம். தற்போது கொசுக்களை விரட்ட பல வழிகளில் முயற்சி செய்து போராடி வருகிறோம், கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை இப்போது கொசு பிரச்சனை பெரிதாக இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மின்விசிரியோ அல்லது ஏதாவது கொசுவை விரட்டக்கூடிய சாதனமோ இல்லாமல் தூங்குவதென்பது மிகவும் சிரமமான நிகழ்ச்சியாகிவிட்டது இன்று. முன்னர் எல்லாம் நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில் ஓரளவுக்கு […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது