. . .

மழைக்காலத்தில் கால்நடைக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிப்பது எப்படி?

 

கால்நடைகள் விவசாயத்தின் முக்கிய அங்கமாக மாறி விட்டன. இந்தியாவில் பல விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, செம்மறி, எருமை, குதிரை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். ஆனால் அவற்றை வளர்ப்பதில் நிறைய சிக்கல் இருப்பதால் வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இயற்கை சீற்றங்களான மழை, பனி, வெயில், புயல் ஆகியவற்றிலிருந்து காப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது..

அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சில குறிப்புகள் கீழே..

தங்கும் இடத்தின் சுத்தம்

கால்நடைகள் தங்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். கொட்டகைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நிறைய தொற்று நோய்கள் பரவும். கொட்டகையின் மேல் கூரை ஒழுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் நடைகள் நீரில் அதிக நேரம் நின்றால் அவைகளுக்கு பல் வேறு வகையான நோய்கள் வரும்.

தரையின் ஈரப்பதம்

தரையில் இருக்கும் ஈரப்பதம் அதிக அளவில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். அதனால் தரைப் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும்.

ஈரமான புல்

மழைக்காலத்தில் புல் கொடுக்கும் போது கவனம் தேவை. புல் அதிக ஈரமாக இருக்கும் அதனால் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நல்ல காய்ந்த புல்லை கொடுக்க வேண்டும். சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்றால் மரணம் கூட ஏற்படும்.

Kalanipoo cow in rainy

 

தடுப்பு நடவடிக்கை:

1. விலங்குகள் இருக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

2. நல்ல பசும் புல்லை உணவாக கொடுக்க வேண்டும். அவற்றை வெட்டி சூரிய ஒளியில் காயவைத்து பிறகு கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.. இது ஒரு நல்ல முறை..

3. பருவ மழை பெய்யும் நேரங்களில் கால்நடைகளை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.. கொட்டகையின் அருகில் இருக்கும் புதர்களை வெட்ட வேண்டும்.. இதனால் பூச்சி, புழுக்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்..

4. கொட்டகைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்..இதனால் பல தொற்று நோய்கள் தடுக்கப்படும்..

5. கால் நடைகளுக்கு தேவையான உணவுகளை உலர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்..அதேபோல் அவைகளையும் உலர்ந்த இடத்தில் பாதுகாக்க வேண்டும்..

 

கால் நடைகளை பாதுகாப்பதால் அவைகள் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதாரமும் முன்னேறுகிறது..

பண்ணையை பாதுகாப்பதன் மூலம் விலங்குகளுக்கு நன்மை அளிப்பதோடு உரிமையாளருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது..

ஆகையால், மழைக்காலத்தில் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்   நடைகளை நல்ல முறையில் வளர்க்கலாம்..


தொகுப்பு: கு. செல்வ சுதாகர். வேளாண் மாணவர்.

மின்னஞ்சல்: selvasudhakarssk@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது