. . .

உழவர்களே உஷார்! படைப்புழு தாக்குதலை தவிர்க்க 9 வழி முறைகள்

படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள். இந்தப் படைப்புழு இப்போது இந்தியா முழுக்கவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

 

படைப்புழு தவிர்ப்பது தொடர்பான வீடியோ:

 

தமிழகமெங்கும் படைப்புழு தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. மக்காச்சோளம் மட்டுமின்றி மற்ற பயிர்களிலும் அதன் தாக்கம் பெருகி வருகிறது.

குறிப்பாக மக்காச்சோளத்தில் குருத்து, இளம் பயிர் முற்றிய பயிர் என எல்லா காலக்கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறும் 9 வழிமுறைகள்,

1. கோடை கால உழவு செய்யுங்கள் அந்தப் புழு பறவைக்கு இறையாகும்.

2. உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துங்கள். கூட்டுப்புழுக்கள் அந்திப் பூச்சிகள் ஆக மாறுவது தடுக்கப்படும்.

3. பிவேரியா பேசியனா(Beauveria bassiana) அல்லது தையாமீதாக்ஸம் (Thiamethoxam) 30 FS பூச்சிக் கொல்லியினை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும்.

4. 60*25 செ.மீ (நன்செய்) மற்றும் 45*25 செ.மீ (புன்செய்) என்ற சரியான இடைவெளியில் பயிர் செய்யவும்.

5. பத்து வரிசைகளுக்கு ஒருமுறை 60 செ.மீ இடைவெளி விட்டு நடுவதால் பூக்கள் மற்றும் கருது பிடிக்கும் பருவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் எளிமையாக மருந்து தெளிக்கலாம்.

படைப்புழு பற்றிய முழு விளக்கத்தோடு அதனைக் கட்டுபடுத்தும் வழி முறை பற்றி அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் கூறுவதைத் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

6. வரப்பு பயிராக தட்டைப்பயிர் சூரியகாந்தி எள் பயிர் போன்றவற்றை வளர்க்க வேண்டும்.

7. இனக்கவர்ச்சி பொறி மற்றும் இனக்கவர்ச்சி குப்பி ஏக்கருக்கு 20 என பரவலாக வைத்து ஆண் அந்திப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

8. செடிகள் 15-20 நாட்கள் வயதில் அசாடிராக்டின் அல்லது தயோடிகார்ப் 75டபிள்யு பி அல்லது எமாமக்டின் பென்சோயேட் (Emamactin Benzoate) இதனை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

9. செடிகள் 40-45 வயதில் ஸ்பைனிடோரம் 12 எஸ்சி அல்லது முழு பென்டைமைட் 480 எஸ்சி அல்லது குளோரன்டிரலினிபுரேல் 18.5 எஸ்சி அல்லது மெட்டாரைசியம் அனிசோபீலியா இதனையும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது