. . .

காட்டைப் பற்றி காட்டு விலங்குகள்

வெட்டுக்கிளி ஒன்னு விட்டு விட்டு

துடிக்குது

வட்ட நிலா ஒன்னு வட்டமிட்டு

அழுகுது

கட்டெறும்பு ஒன்னு கண்ண கட்டி

நடக்குது

காட்டுக் குயில் கூட காட்ட விட்டு

பறக்குது

குரங்கு மயில் எல்லாம்

சினங்கொண்டு மொறைக்குது

எதிரும் புதிருமா எல்லாமே

கெடக்குது

கண்ணால் காண்பது எல்லாம்

பொய்

காதால் கேட்பது எல்லாம்

பொய்

தீர விசாரித்தலே

மெய்

அய்ய்ய்ய்!

விசாரிக்கலாமா? விசாரிக்கலாமா?

வெட்டுக்கிளிய கேட்டா வெட்டருவா

எடுக்குது

வட்டநிலவ கேட்டா இன்னும்

அழுகுது

கட்டெறும்ப கேட்டா கண்ணு வீங்கி

சிவக்குது

காட்டுக்குயில கேட்டா விம்மி விம்மி

அழுகுது

குரங்குகிட்ட கேட்டா பட்டுனு

உண்மைய

உடைக்குது

என்னனு சொல்லுச்சாம்

‘மனிதர்கள் காட்ட அழிக்கறாங்க

மரத்தையும் நிலத்தையும்

அழிக்கிறாங்க

வானத்து நீர அழிக்கிறாங்க

அருவிய கூட மறிக்கிறாங்க

அரிய உயிர்களா ஆன பின்பும்

அழிக்கிறாங்க

எங்கள அழிக்கிறாங்க!

எங்கள் வாழ்வ அழிக்கிறாங்க!

வழி மறிக்கிறாங்க!

மனிதர்கள் வாழ எங்கள

அழிக்கிறாங்க !’

கேட்டது எல்லாம்

பொய்யா மெய்யா

தேடுங்க சிறுவர்களே

உண்மைனு தெரிஞ்சா

தவற தடுக்க வாருங்கள்

குழந்தைகளே…


ஆக்கம்: சு. பொ (வங்கித் தேர்வில் வெற்றி பெற முயற்ச்சியும், விவசாயத்தின்பால் ஆர்வமும் கொண்டு,வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சிந்தனைகளை சிறுவர்களுக்கு கொண்டு சேர்க்க எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ள, பொதுவியல் பொறியாளர்)

மின்னஞ்சல்velayuthamvelusp@gmail.com
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது