. . .

மருந்துகள் தெளிக்காமல் பூச்சிகளையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்! எப்படி?

 

ங்கக வேளாண்மை என்பது வேதி பொருட்களான உரம், பூச்சிக் கொல்லி, களை கொல்லிகளை உபயோகிகாமல் இயற்கை பொருட்களான தொழு உரம், அங்கக பூச்சி கொல்லி மற்றும் களை கொல்லிகளை உபயோகித்து வேளாண்மை செய்வதாகும். இதில் களை மேலாண்மை பயிர் மகசூலை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் களைகளின் மூலம் 33 சதவிகிதமும், பூச்சிகளின் மூலம் 20 சதவிகிதமும், பூஞ்சைகளின் மூலம் 26 சதவிகிதமும் பயிர் மகசுல் குறைகின்றது. அங்கக வேளாண்மையில் வேதி பொருட்கள் உபயோகிக்காத காரணத்தினால் களைகளைைக் கட்டுபடுதுவது கடினமானதாகும். ஆனால் கிழ்காணும் முறைகளை பயன்படுதினால் அங்கக வேளாண்மையில் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

1. பயிர் சுழற்சி

ஒரே பயிரை ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக பயிரிடுவதால் பயிரின் மகசூல் குறைவதோடு களைகளின் ஆதிக்கம் அதிகமாகவும் இருக்கும். எனவே வெவ்வேறு வகைையான பயிர்களைப்் பயிரிட்டோமானால் அதிக மகசூல் கிடைப்தோடு களைகளின் ஆதிக்கமும் குறைகின்றது.

 

Kalanipoo mulching weed pest
மூடாக்கு முறை

2. மூடாக்கு போடுதல்

மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதிற்காக வைக்கோல், உதிர்ந்த இலைகள், பசுந்தாள் உரம், தொழு உரம் ஆகியவற்றை பயிர்களுக்கு இடையில் மண்ணின் மீது பரவி வைப்பர். இதற்கு மூடாக்கு போடுதல் என்று பெயர். இதன் மூலம் நீர் ஆவிியாதல் தடைபடுவதால் மண்ணின் ஈரப்பதம் காப்பதோடு களை செடியின் விதைகள் முளைக்க தேவையான சூரிய வெளிச்சம் கிடைக்காமல் களைகளின் வளர்ச்சி குறைகின்றது.

3. பயிர் நடவு முறைகள்

அ. பயிர் இடைவெளி

பயிர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில்தான் களைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே பயிர் இடைவெளியினை குறைப்பதின் மூலம் களைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

ஆ. பயிர் இரகம்

வேளாண்மையில் பயிர் அல்லது களை எது முதலில் வளர்கின்றதோ அதுவே ஆதிக்கம் நிறைந்தது ஆகும். வேகமாக வளரக்கூடிய இரகத்தை தேர்வு செய்வதன் மூலம் களைகளின் ஆதிக்கத்தை குறைக்கலாம்.

Kalanipoo tractor plough

இ. உழுதல்

களைகள் விதையின் மூலம் மட்டுமில்லாமல் அதன் வேர், வேர்த்தண்டு மற்றும் கிழங்குகளின் மூலமாகவும் பரவுகின்றது. நிலத்தை உழுவதால் மண்ணின் உள்ளே மறைந்து இருக்கும் விதைகள், வேர், வேர்த்தண்டு மற்றும் கிழங்குகள் மண்ணின் மேலே வரும். பறவைகள், பூச்சிகள் விதைகளை உண்பதன் மூலமகவும், சூரியவொளியினால் வேர், வேர்த்தண்டு மற்றும் கிழங்குகள் காய்ந்து போவதின் மூலமகவும் களைகள் பரவுவதைக் குறைக்கலாம்.

4. ஊடு பயிர்

பயிர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் ஊடு பயிர் பயிரிடுவதன் மூலம், களைகள் வளர்வதற்கு தேவையான இடம், நீர், சத்து, சூரியவொளி, காற்று ஆகியன கிடைகாமல் அதன் ஆதிக்கம் குறைகின்றது.

Kalanipoo drip irrigation

5. சொட்டு நீர்ப்பாசனம்

பயிர்களுக்கு நீர்பாசனம் செய்யும் போது, களை செடிகள் பயிரை விட அதிகமாக நீரை உறிஞ்சி அதன் மகசூலை குறைக்கின்றது. இதனை தவிர்க்க நீரை பயிர்களின் வேர்களுக்கே கொண்டு சேர்க்கும் சொட்டு நீர் பாசனத்தை பின்பற்ற வேண்டும். தேவையான நீரை வேர்களுக்கே கொண்டு சேர்ப்பதால் களைகளின் மூலம் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அங்கக வேளாண்மையில் களைகளை கட்டுப்படுத்தி பயிர் மகசூலை அதிகரிக்கலாம்.


தொகுப்பு: முனைவர். இ.அ.அர்ச்சனா,
உதவிப் பேராசிரியர் (உழவியல் துறை), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, வேலூர்.
தொடர்புக்கு : 9791539563
nancyarchu@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது