. . .

இந்த மரம் வளர்க்கவில்லை என்றால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்..!

ல்ல மரம் வளர்ப்போம், அதுவும் நம்ம மரம் வளர்ப்போம்!

ஓர் அரசு, ஓர் வேம்பு, ஓர் ஆல், பத்து புளி, முக்கூட்டாக விளா, வில்வம், நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களை நடுவோர் நரகத்திற்கு போக மாட்டார்கள் என்று விருட்ச ஆயுர்வேதத்தில் 23 வது பாடலில் சுரபாலர் கூறியிருக்கிறார்.

மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் 27 மரங்கள் வரும். இது மரம் நடுவதன் அவசியத்தை 11ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்ததின் சான்று. இன்றும் நாம் மரம் நடும் விழா நடத்துகிறோம். ஆனால் நம் மண்ணிற்கு சம்பந்தம் இல்லாத மரத்தை அழகிற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் வளர்க்கின்றோம். காடுகளை உருவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு அரசாங்கமும் யூக்கலிப்டஸ், தேக்கு போன்ற ஒற்றை மரம் வளர்ப்பையே தவறாக முன்னெடுக்கிறது.

நல்ல மரம் வளர்ப்பதையும்நம்ம மரம் வளர்ப்பதையும்..” மரம் நடும் ஆர்வலர்களுக்கும், விவசாய மாணவர்களுக்கும், சூழியலாளர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில், “நம்ம மரம் வளர்ப்போம்என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் தி அக்ரேரியாமாத இதழில் வெளிவர இருக்கிறது.

1. புளிய மரம் – Tamarindus indica

தரிசில் தழைத்து, வறட்சியிலும் வாழ்வு தரும் புளிய மரங்கள் வணிக முக்கியத்துவமும், மருத்துவச் சிறப்பும் பெற்றவை. புளியங்கொட்டையை ஊறவைத்து, அரைத்து கொடுத்தால் கறவைப் பசுக்கள் பால் சொரியும். கட்டுமானத்திற்குரிய உறுதியான மரம் புளியமரம். புளியமரம் 20 அடி கூட உயரமாக வளர்ந்தாலும் எந்த புயலாலும் அசைக்கமுடியாது.

புளிய மரம்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் புளியம்பழ சர்பத். புளியை தண்ணீரில் கரைத்து சிறிது வெல்லமும் சேர்த்து குடிக்க வேண்டும். மூலத்தினால் ஏற்படும் ரத்தப்போக்குக்கு புளியம்பூ சிரப் வழங்கலாம்.

புளிய மரங்களைத் தரிசு நில மேம்பாட்டின் கீழும், சாலை ஓரங்களிலும், வீட்டுக்கு பின் புறத்திலும் வளர்த்துப் பயன்பெறலாம்.

2. விளா மரம் – Feronia elephantum (wood apple)

பொதுவாக முள் நிறைந்த மரங்கள் எல்லாம் வறட்சியை தாங்கும். அந்த வகையில் விளா மரமும் வறட்சி தாங்கி வளரும். இது 70 அடி வரை கூட வளரும். இலைகள் சிறிதாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற சமயங்களில் விளாம் பழம் படைத்து இறை வழிபாடு செய்வது மரபு.

விளா மரம்

மரத்திலிருந்து தானே விழுந்த பழம் ருசியாக இருக்கும். நன்கு முற்றிய காய்களை பறிக்க வேண்டும். விளாம்பழத்தில் வெல்லச் சக்கரையைக் கலந்து சாப்பிடலாம்.

விளாம் பித்தத்தை தெளிய வைக்கும் அரிய மூலிகை. விளாம்பழத்தில் நிறைய புரதச் சத்து இருக்கிறது. விளா இலையில் வாசனை எண்ணெய் (Essential oil) வடிக்கலாம்.

3. வில்வம் – Aegle marmelos (Bel)

வில்வமும் வறட்சி தாங்கி வளர கூடிய முள் மரம். இது சிவனுக்கு உகந்த மரமாகவும், பல கோவில்களில் தல விருட்சமாகவும் உள்ளது. இம்மரத்தை பெருமளவில் தெய்வீகப்படுத்தியுள்ளதன் பொருள் இதன் பல தரப்பட்ட பயன்களே ஆகும். களர் உவர் நிலங்களில் வளரும் இம்மரம் தரிசு மேம்பாட்டிற்கும், வேலிப் பயிராகவும் வளர்க்கலாம். வெள்ளாடுகளுக்கு இதை தீவனமாக வழங்கப்படும்போது கழிச்சல் நோய் கட்டுப்படும்.

வில்வம்

வில்வத்தின் எல்லா பாகங்களுமே மருந்து. தசமூல மருந்தில் வில்வமும் ஒன்று. தற்போதைய ஆய்வுகளில் வில்வம் நீரழிவு நோயை குணப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

4. நெல்லி – Emblica officinalis

எல்லா விதமான மண்ணிலும், 47 டிகிரி வெப்பத்தையும் கூட தாங்கி வளரக்கூடிய மரம். உவரிலும் வளரும், களரிலும் வளரும்.

அவ்வையாருக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கி நீண்ட ஆயுளைக் கொடுத்ததாக ஒரு இலக்கிய செய்தி நாம் அறிந்ததே. உண்மையாகவே நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் உண்டு. மூன்று ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின்சி ஒரு நெல்லிக்காயில் உள்ளது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் சேர்ந்த கலவையான திரிபலா சூரணம் சளி காய்ச்சலை குணப்படுத்தும்.

Nelli kalanipoo
நெல்லி

நாட்டு நெல்லி காய்ப்பதற்கு 7-8 ஆண்டுகள் ஆகலாம். அதே சமயம் ஒட்டு நெல்லி 3 வருடத்தில் காய்க்கும். எனினும் நாட்டு நெல்லி மருந்துக்கு மிகவும் உகுந்தது.

5. மாமரம் – Mangifera indica

மாம்பழ உற்பத்தியிலும் நுகர்விலும் இந்தியாவுக்கே முதலிடம். மாம்பழத்தில் பல ரகங்கள் உண்டு. எல்லா ரகங்களையும் ஒட்டுக் கன்றாகவும் கொட்டை கன்றாகவும் நடலாம். கொட்டை கன்றுகள் உயரமாக வளர்ந்து நிறைய பக்கக் கிளைகள் உருவாகும். வீட்டு தோட்டத்திற்கு கொட்டை கன்றை தேர்வு செய்யலாம்.

மாம்பழத்தில் வைட்டமின்சி அதிகம், சன் ஸ்டரோக் வராமல் தடுக்க மாம்பழ ஜூ்ஸ் உதவுகிறது. மாம்பழத்தில் உப்பு வெல்லம் சீரகம் சேர்த்து பன்னாதயாரிக்கப்பட்டு உணவாகிறது.

Mangifera indica
 மாமரம்

இதை தவிர அரசமரம், வேப்ப மரம் மற்றும் ஆலமரம் ஆகிய மரங்களையும் வளர்க்க நரகத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று சுரபாலர் பாடியுள்ளார். சொர்க்கம் நரகம் இருக்கோ இல்லையோஅவர் சொன்ன இந்த மரங்களை நாம் நம் வாழ்நாளில் நட்டு பராமரித்து வந்தால் நம் சுற்றுப்புறத்திற்கு நன்மை செய்வதுடன், அதன் மருத்துவ குணங்களால் நம் ஆயுளும் அதிகரிக்கும்.

நல்ல மரம் வளர்ப்போம்அதுவும் நம் மண்ணிற்கு ஏற்ற மரம் வளர்ப்போம்மரத்தின் தேடல் தொடரட்டும்.

தொகுப்பு: மு.இராம் சுந்தர், இந்திய வன அதிகாரி.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது