. . .

நாம் தாம் முதல் குற்றவாளி- மேரியும் அவள் அம்மாவும்

 

‘அம்மா, தூக்கணாங்குருவி எப்படிமா இருக்கும்..?! அது எங்க இருக்கும்.?’ ‘மேரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் சொல்றேன்’  ‘இல்ல இப்பவே சொல்லுமா எங்க சார் கேட்டு வரச் சொன்னாங்க’ ‘சரி இங்க வா, அது கிணறு, மின் வேலி போன்ற இடத்துல கூடு கட்டி வாழும், ஆண் குருவிகள் பெண் குருவிக்காக கூடு கட்டும். இந்த கூடுகள் பார்க்க அழகா இருக்கும். போதுமா..? எனக்கு வேல இருக்கு என்ன விடு’ ‘அம்மா கொஞ்சம் இருங்க..’

‘அந்த குருவிகள் எல்லாம் இப்ப எங்க இருக்கு..??’

‘கிராமங்கள் மற்றும் காடுகளில், வயல்களில் இருக்கும்.. இப்போ இந்த இனம் குறைந்து விட்டது’  ‘ஏம்மா..?’

‘இந்த இனம் மட்டுமல்ல இன்னும் நிறைய பறவை மற்றும் விலங்குகள் இனம் அழிந்து கொண்டே தான் இருக்கிறது..

இந்த நவீன உலகில் பிளாஸ்டிக் (நெகிழி), தார் சாலைகள், காடுகள் அழித்தல், நகரமயமாதல், போன்றவை இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கு மேரி’

‘அம்மா இதுக்கு எந்த நடவடிக்கையும் எடுகலயாம்மா..?!’

‘இதுக்காக அரசாங்கம் நிறையா நடவடிக்கைகள் எடுத்துட்டே தான் இருக்காங்க. ஆனால் நாம் தான் அதைச் சரியாக நடைமுறை படுத்துவதில்லை, அரசாங்கத்த குறை மட்டும் சொல்லீட்டு இருக்கோம்’

‘அப்படியா! நாம தான் இதுக்கு காரணமா!?’

‘ஆமா, மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்துத் தர வேண்டும்..

குப்பைகளை எடுத்துச் செல்ல கிராமம் மற்றும் நகராட்சிகளில் ஆட்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் தனித்தனியாக பிரித்து தர வேண்டும்.. மக்காத குப்பைகள் (பிளாஸ்டிக்) சுமார் நூறு வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பிளாஸ்டிக் பொருட்களை ஆடு, மாடுகள் உண்பதால் அவை இறந்து விடக்கூடும். ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பொருட்கள் தீமையே தருகிறது.. அதற்கு மாறாக இலை, சணல், காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்தலாம்.. தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட‌ பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்ய கூடியவை, நாம் சாலைகளில் பிளாஸ்டிக் குப்பை போட்டுவிட்டு அரசாங்கத்த எபோதுமே குற்றம் சொல்லீட்டு இருக்கோம், நம்முடைய தப்ப திருத்திக்கிட்டுத்தான் அரசின் கடமையைப் பேச வேண்டும்’

‘நிச்சியமாக மா, நம் கடமையை நாம் செய்ய வேண்டும் தானே’

‘கண்டிப்பாக மேரி. இதையும் தெரிந்துகொள்,  கேரளாவில் மக்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது, அதையும் நாம பின் பற்றலாம்’

‘ஓ! அப்படியா மா’  ‘ஆமா மேரி நெகிழி பொருட்களைக் கண்ட இடத்தில் போடாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம் ஆனால் எரிக்கக்கூடாது..

பிளாஸ்டிக்கு பதிலாக சிலிக்கான் சேர்மம் பயன்படுத்தலாம்’

‘மேரி இதுனால சுற்றுச்சூழல் பிரச்சனையும் பெரிதாக இருக்கு தெரியுமா!?’

‘கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைப்பட்டு வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகிறது..

நெகிழி பைகள் வேளாண் நிலத்தில் தங்கி அவற்றின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது.

கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்து விடக் கூடியவை’

‘அம்மா!! இவ்வளோ தீமை இருக்குற பிளாஸ்டிக் பொருள நாம் பயன்படுத்த வேண்டாம்.. நானும் இனி கடைகளில் பிளாஸ்டிக் இருக்குற எதையும் வாங்கி சாப்பிட மாட்டேன்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் சொல்றேன்.. எங்க சார் கிட்ட சொல்லி கிளாஸ்லயும் சொல்லச் சொல்றேன்..’

சரி மேரி… இப்ப எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.. நா போறேன்.. நீயும் போய் படி..


தொகுப்பு: கு. செல்வ சுதாகர், வேளாண் மாணவர்.

மின்னஞ்சல்: selvasudhakarssk@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது