. . .

வேளாண்மையில் நிலையான வருமானத்திற்கு கூட்டுப்பண்ணைத் திட்டம்

kalanipoo fpo

 

லிவடைந்து அழிவை நோக்கிச் செல்லும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் பொருட்டு இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை பலர் கையில் எடுத்துள்ளனர். கூட்டுப்பண்ணைத் திட்டம் என்பது ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கையில் உள்ள முதலீடுகளை வைத்து விவசாயம் செய்வது. ஏழை விவசாயிகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் நடத்தப்படுகிறது.

Kalanipoo fpo
P.சிவராமன் அவர்கள்

இதில் அனைத்து விதமான பயிர்களையும் பயிரிடலாம். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் இதர உயிரினங்களையும் வளர்க்கலாம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படாது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கத்தை கூட்டு பண்ணை திட்டதின் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சிவராமனிடம் கேட்ட போது, கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் 20 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இது உழவர் உற்பத்தியாழர் குழு எனப்படுகிறது. 20 பேர் வீதம் 5 குழுக்கள் சேர்ந்து 100 பேர் கொண்ட ஒரு குழு செயல் படுகிறது. 100 பேர் கொண்ட 10 குழு வீதம் 1000 பேர் சேர்ந்து வழி நடத்தப்படுகிறது.

இதில் அவர்கள் கத்தரி, வெண்டை, மஞ்சள், மக்காசோளம், மிளகாய் போன்ற பயிர்களையும், ஆடு, மாடு போன்ற கால் நடைகளையும் வளர்த்து வருகின்றனர். 20 பேர் கொண்ட உழவர் ஆர்வாளர் குழுவிற்கு அரசாங்கம் 5 லட்சம் வரை கடனுதவி தருகிறது. அதுமட்டுமின்றி மிசினரி, விதை, உரம் போன்றவைகளையும் அரசே தருகிறது. மாதம் ஒருமுறை கருத்தரங்கம் நடைபெற்று சிறந்த கருத்தின் படி வழி நடக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசே முன் நின்று நடத்துவுவதாகவும், நாமும் சிறு நிதி அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் நோக்கங்கள்:

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அழிந்து வரும் விவசாயத்தை மீட்பது தான். தனக்கென இருக்கும் சொந்த நிலங்களில் செய்ய தினசரி கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. இந்த ஓடும் உலகில் மனிதனாகிய நாம் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆதலால் தனிப்பட்ட முறையில் இருக்கும் நிலங்களில் முழுமையான கவனத்தை தர முடியாமல் போகிறது. ஐந்து விரல்களும் சேர்ந்தால்தான் ஒரு வேலையை முழுமையாகவும் மன திருப்தியுடன் செய்ய முடியும். அதுபோல தன் வேலைகளை தன் எண்ணத்தின் அடிப்படையில் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கூட்டுப்பண்ணை வேளாண்மை திட்டம்.

அனைவரின் பங்களிப்பும் இருப்பதால், இதை நாம் முதன்மையாக அல்லாமல் துணை வேலையாகவும் கூட செய்யலாம்.

நாம் கூட்டுப்பண்ணை முறையில் விவசாயம் செய்ய குறைந்த அடிப்படை அனுபவம் இருந்தாலே போதுமானது. இன்றயை காலகட்டத்தில் தனிநபர் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. பல கைகள் ஒன்றாக நம்பிக்கையுடன் ஒன்று சேர்ந்து நல்லதொரு புதிய தலைமுறை உருவாக்க முடியும் என்பது உறுதி. கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் அனைவரின் பங்களிப்பும் இருப்பதால், இதை நாம் முதன்மையாக அல்லாமல் துணை வேலையாகவும் கூட செய்யலாம். திட்டத்தில் உள்ள அனைவரிடமும் ஆலோசனை கேட்டு சிறப்பானவரின் கருத்தை எடுத்து வழி நடத்தலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

30% முதல் 50% பாசன வசதி இருந்தால் போதுமானதாக இருக்கும். மண்வளம் பயிரிட ஏதுவாக உள்ளதா? என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த பரிசோதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கூட்டுறவு மற்றும் வேளாண் மண் ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதிக்கப்படுகிறது. சிறிதளவு மண்ணை எடுத்துக் கொண்டு சென்று பரிசோதனை மூலம் வளமான மண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம். வளமானதாக இல்லையெனில் வேளாண் ஆலோசகர் மூலம் அதற்கான இயற்கை உரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களின் குறைந்த பட்ச ஒத்துழைப்பை கொடுத்தாலே போதுமானது.

நாம் ஆரம்பத்தில் நில மேம்பாடு, பண்ணை இல்லங்கள், வாகனங்கள், வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள், முதற்கட்ட விவசாய பணிகள் நிரந்தர வருவாய் வரும் வரைக்குமான செலவுகள் இவைகளுக்கு கணிசமான நிதியாதாரங்களை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டுப்பண்ணைத் திட்டம் ஒரே குடையின் கீழ், ஒரே குடும்பமாக உறுப்பினர்களாலே நடத்தப்படுவது. வருடா வருடம் வரும் இலாபத்தில் பங்குதாரர்கள் அவர்கள் பங்களிப்பு செய்ததற்கு ஏற்ற பணம் பிரித்து எடுத்து கொள்ளலாம். அல்லது தங்களின் விருப்பபடி மறு பங்களிப்பு செய்து கொள்ளலாம். பண்ணையில் தங்கி வேலை செய்யும் நபர்கள் தினக் கூலியாக பெற்று கொள்ளலாம். இதைத் தவிர பண்ணை இலாபத்திலும் உரிமை உண்டு.

kalanipoo fpo

இடைநிறுத்தல்:

இந்தக் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் இருந்து விலக நினைத்தால் நம் முதலீட்டின் அளவிற்கு ஏற்றவாறு நிதி வாங்கிக் கொண்டு விலகி விடலாம். அல்லது தன் முதலீட்டை மற்றொருவருக்கு விற்று விடலாம். அதைத் தவிர இந்தத் திட்டத்தை கலைத்து விட முடியாது. கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் கிடைக்கும் வருவாய்களை இரண்டு ஒருங்கிணைப்பாலர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு கணக்கில்(Joint Account) சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் இருந்து விலக வாய்ப்புகள் இல்லை. ஏனேனில் அவர்கள் எவ்வித துன்புறுதலுக்கும் ஆளாகுவதில்லை. சொந்த நிலங்களில் வேளாண்மை செய்வது போன்ற உணர்வு இருப்பதால் இன்னும் ஒற்றுமையுடன் இருப்பர்.

 

அரசின் பங்களிப்பு:

அரசே இத்திட்டதிற்கு முன்வந்து நிதியுதவி அளிப்பதோடு, அவர்களே வழி நின்று நடத்துகின்றனர். ஒரு குழுவிற்கு ஐந்து லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. இதுமட்டுமின்றி அரசே பயிரிட தேவையான பொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, இயந்திரம் போன்ற சாதனங்களைத் தருகிறது. தற்போது இந்தத் திட்டமானது சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் சிவராமன் என்பவர் தலைமையிலும், குதிரைகவண்டம் பாளையத்தில் பெரியசாமி தலைமையிலும் நடந்து வருகிறது. குழுக்கள் முறையில் அமைக்கப்பட்டு தலைவரின் சொல்படி வழிநடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை நாம் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஆகும் செலவுகளை குழு உறுப்பினர்கள் சேர்ந்து செய்ய வேண்டும். சில மாதங்கள் கழித்து அந்தப் பணத்தை அரசே நம்மிடமே அல்லது வங்கி கணக்கிலோ செலுத்தி விடும். 1000 பேர் கொண்ட குழுவிற்கு 70 ஆயிரம் வரை செலவுகள் ஆகலாம்.

kalanipoo fpo

முக்கிய அம்சங்கள்:

பண்ணை அமையும் இடம், மண்ணின் தரம், மழை அளவு, இயற்கைச் சூழல், மக்கள் நடமாட்டம் ஆகியவற்றை நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டும். நிதி மேலாண்மை மற்றும் இதர பல விசயங்கள் சார்பாக அங்குள்ள மக்கள் அனைவரும் ஆலோசனை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே தமிழகம் முழுவதும் உள்ள விவசாயம் செய்ய விருப்பமுள்ளவர்கள், நாளைய தலைமுறை வலிமை உள்ளவராக வளரவேண்டும் என்பதே.

மேலே கூறிய விசயங்கள் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை உருவாக்க இருக்கும் உங்களுக்கு நிச்சயம் அடித்தளமாக அமையும் என நான் முழுமையாக நம்புகிறேன்.


கூட்டுப்பண்ணை திட்டத்தை பற்றி மேலும் விவரங்களை பெற: P.சிவராமன் MA,B.Ed, M.Phil. உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர்(தோட்டக்கலை) பெரியநாயக்கன் பாளையம் வட்டாரம், சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு: 9952602579.

படைப்பு: கு.செல்வ சுதாகர், வேளாண் கல்லூரி மாணவர் selva247gm26@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது