. . .

வனத்துறை சார்ந்த எந்த மரத்தை வளர்க்கலாம்? எதை வளர்க்கக்கூடாது?

செம்மரம் செஞ்சந்தன மரம்

 

“சந்தன மரம்” வளர்க்கலாமா? வேண்டாமா? வீடுகளில் அழகிற்காக கூட வளர்க்கக் கூடாதா? பள்ளிக்கூடம், தெருக்களிலும் கூட வளர்க்க முடியாதா? இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடையாக அமையப் போகிறது இந்தக் கட்டுரை.. வாருங்கள் வாசிப்போம்…

சந்தன மரம், செம்மரம், தேக்கு என்றில்லை மற்ற எந்த மரங்களை வளர்க்கவும் நாம் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள், முதலாவது சந்தன மரம் செம்மரங்களைப் போன்று பல மரங்களை நாம் வளர்க்க அரசு தடை விதித்திருக்கிறது என்ற பொதுவான அறியாமை, இரண்டாவது அவை வளர அதிக காலம் எடுத்துக் கொள்வது.

உடனடி பணத் தேவைக்காக குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து சிறிய அளவிலான லாபத்தை எடுத்துக் கொண்டிக்கிருக்கிறோம். மரங்கள் வளர்ப்பில் நல்ல லாபம் இருக்கிறது. முன்பாக எந்த மரங்களை நம் அரசு வளர்க்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

சந்தன மரம் கழனிப்பூ
சந்தன மரம்

அப்படி வளர்க்கக்கூடாது என்று எந்த அரசும் சொல்லவில்லை. முன்பு சொல்லியிருந்ததை அரசு விலக்கிக் கொண்டது. சாதாரண மரம், வனத்துறை சார்ந்த மரம் என எந்த மரமும் தனித்தனியாக இப்போது இல்லை. அரசு எந்த மரத்தையும் ‘இது சட்டப்படி வளர்க்க வேண்டிய மரம்’ என்று குறிப்பிடவில்லை. சில விதிமுறைகள் மட்டும் உள்ளன அவற்றை சரியாக செய்தால் போதும். வனத்துறை சார்ந்த மரங்களை வளர்க்க எந்த விதச் சிறப்பு திட்டங்களும் இல்லை. நம் விருப்பத்தின் பெயரில் வளர்த்துக் கொள்ளலாம். சந்தன மரம், செம்மரம் இவற்றை தவிர மற்ற அனைத்து மரங்களையும் நாமே சந்தைப் படுத்தலாம். செம்மரம், சந்தன மரம் மட்டும் சட்டப்பூர்வமாகத் தான் சந்தைப் படுத்த முடியும்.

மற்ற மரங்களை சாலை வழியாக எடுத்துச் செல்லும் போது எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். சந்தனம் மற்றும் செம்மரம் போன்றவற்றை வெட்டுவதற்கு முன்பாகவே அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

சந்தன மரம் வளர்ப்பு

சந்தன மரம் வளர்ப்பிற்கான நீக்கத்தை அரசு 2002 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தியது. அதனால் நாம் சாதாரணமாக வீட்டில், தோட்டத்தில் கூட வளர்க்கலாம். தோட்டத்தில் வளர்க்கும் போது, நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் போன்ற விவரங்கள் கிராம நிர்வாக (VAO) அலுவலரிடம் கொடுத்து பதிவேற்ற வேண்டும்.

செம்மரம் கழனிப்பூ
செம்மரத் துண்டு

சந்தன மரம் சுமார் 40 முதல் 50 அடி உயரம் வரை வளரக்கூடியது. 2.4 மீ சுற்றளவு கொண்டது. ஒரு மரம் 40 கிலோ கிடைக்கும் அளவிற்கு வளரும் தன்மை கொண்டது. ஒரு கிலோ ரூபாய் 12,500 வரை விற்கும்.

நல்ல செம்மண் நிலம் வளர்ப்பிற்கு ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 400 கன்றுகள் வரை வளர்க்கலாம். ஆனால் வளர்ந்து நிற்க சுமார் 15 முதல் 20 வருடங்கள் ஆகும். அப்போது கோடிக் கணக்கில் லாபம் கிடைக்கும்..

நம் தமிழ் நாட்டில் தான் சந்தன மரம், செம்மரம் வளர்க்க யாரும் விரும்புவதில்லை. வடமாநிலங்களில் இது நல்ல லாபம் தரும் தொழிலாக மாறி உள்ளது. என்ன, இதற்கு பொறுமை அவசியம்.

ஆனால் மரம் வளரும் சமையத்தில் சந்தன மரத்துடன் மற்ற மரங்களையும் ஊடுபயிராக வளர்க்கலாம். வளர்ந்த பிறகு வெட்ட நினைத்தால் மாவட்ட வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வந்து வெட்டி எடுத்துச் செல்வார்கள்.

சில நாட்களுக்கு பிறகு ஏலம் விடப்பட்டதும் 80% நமக்கும் 20% அரசிற்கும் சேறும். சிறிய அளவில் சந்தன மரக் கட்டையை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

வேளாண் காடுகள் (Agro forestry) முறையையும் அரசு பெரிதாக ஊக்குவித்து வருகிறது. மற்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்தி மரங்களையும் வளர்த்து அதில் உள்ள லாபத்தை பார்ப்பது தான் வேளாண் காடுகள்.

இவ்வளவு நல்ல விஷயங்கள் அடங்கிய வனத்துறை சார்ந்த மரங்களை வளர்த்து அதிக லாபத்தை பெற சிறிய அளவிலாவது முயன்றிடுங்கள்.


தொகுப்பு: கு. செல்வ சுதாகர், வேளாண் மாணவர்.

 

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது