. . .

பயங்கரமான காட்டுத்தீ பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலியா

 

#ஆஸ்திரேலியா_காட்டுத்தீ

இரு நாட்களாக உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கிற அதிர்ச்சி செய்தி காட்டுத்தீ தான்…

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ மிக உக்கிரமாக எரிந்து கொண்டிருக்கிறது… இது வரை 24 மனித உயிர்களும், ஏறத்தாழ 500 மில்லியன் வன உயிரினங்களும் 1300க்கும் அதிகமான குடியிருப்புகளும் 6 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்புகளும்   தீக்கிரையாகிவிட்டன.. இன்னும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது… இதுல நிறைய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்… அதை பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயத்தை சொல்றேன்…

*காட்டுத்தீ எப்படி உருவாகுது?

இயற்கையாகவும், செயற்கையாகவும்.

*இயற்கையா எப்படி?

மின்னல் தாக்குவதால் மூலம், மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுகையில்.

*செயற்கையா எப்படி?

மனித ஈடுபாட்டினால், வேணும்னே கொளுத்தி போடுறது, மின்சார கம்பிகள் உராய்வதன் மூலமா, கண்ணாடிப்பாட்டில்கள், அணைக்காத சிகரெட் துண்டு, இடம்பெயர்தல் விவசாயம் (Shifting Cultivation), இன்ன பிற.

*அப்போ இந்த ஆஸ்திரேலியாவுல ஏற்பட்டது இயற்கையாவா? செயற்கையாவா னா? 

சில வல்லுநர்கள் கணிப்பின் படி மின்னல் தாக்கி ஏற்பட்டதாக சொல்றாங்க.. சுழற்சி முறையில் உருவாகுற பைரோகுமுலோனிம்பஸ் மேகங்கள், மின்னல்க்கு ஒரு முக்கியமான காரணம். அது இல்லாம காலநிலை மாற்றமான Indian Ocean Dipole (IOD) என்கிற சூழ்நிலையும் ஆஸ்திரேலியா வெப்பத்துக்கு காரணமா இருக்கலாம்னு சொல்றாங்க.

*இது எப்போ இருந்து எரியுது?

செப்டெம்பர் மாசத்துல இருந்தே எரியுதாம்..

*ஆனா நமக்கு இப்போ தான் தெரிய வருதே?

வருஷா வருஷம் குறிப்பிட்ட அளவுல எரிஞ்சுட்டு  அணைஞ்சிடுமாம்.. ஆனா இந்த வருஷம் மிகப்பெரிய அளவுல பரவும்னு அவங்க எதிர்பாக்கவே இல்லையாம்.

*ஏன் இந்த வருஷம் மட்டும் இப்படி பரவுச்சி?

பருவநிலை மாற்றம்(Climate change) ஒரு வித காரணம்னு வல்லுநர்கள் சொல்றாங்க… அது இல்லாம அதிக காற்று (high wind), அதிக உஷ்ணம் (high temp) எப்போவும் இல்லாத அளவுக்கு இருந்ததும் காரணம்னு சொல்றாங்க..(Indian ocean Dipole) போன வருஷ வருடாந்திர சராசரி வெப்பநிலையை விட இந்த வருஷம் 1.5degree C அதிகமாயிடுச்சாம். போன டிசம்பர்ல வெப்பநிலை 42 டிகிரி C அளவுக்கு இருந்துச்சாம்… இதுல கவலை என்னான்னா அங்க இனிமே தான் கோடைக்காலமே வருதாம் (Jan and Feb).

*ஆஸ்திரேலியா முழுசாவே நிறைய பாதிப்பா?

பரவலாக எல்லா மாநிலங்கள்ளையும் இருந்தாலும், அதிகமா அடி வாங்குன இடம்னு பாத்தா நியூ சவுத் வேல்ஸ், சிட்னி மற்றும் விக்ட்டோரியா தானாம்…

kalanipoo australia fire

*என்னென்ன மரங்கள்லாம் எரியுதாம்?

ஆஸ்திரேலியாவுல 80 சதவீதத்துக்கும் அதிகமா உள்ள மரவகைனு பாத்தா யூகலிப்டஸ் எனப்படும் தைல மரமும், அகேசியா எனப்படும் வேல மரங்களும் தான்.  இதுல வருத்தம் என்னனா இந்த இருவகை மரங்களும் நல்ல எரியக்கூடிய ரகத்தைச் சார்ந்தவை..

*எப்படி இதுங்க மட்டும்  நல்லா எரியுது?

யூகலிப்டஸ்ல gasoline-ங்கிற எரிதலுக்கேற்ற கூறுகள் இருப்பதும், அகேசியா மரக்கட்டைகள் நல்ல எரிதிறன் கொண்டதா இருப்பதாலும் தீயின் உக்கிரம் குறையாமலும், வேகமா பரவிட்டும் இருக்காம்.

*இதை அணைக்கவே முடியாதா சார்?

தீ மில்லியன் ஹெக்டேர் கணக்குல பரவி இருக்கிறதால அதை அணைக்கிறதும், கட்டுப்படுத்துறதும் மிக கஷ்டமாவே இருக்காம்… அப்படி அணைக்க முற்பட்டாலும் அது ‘கேம்ப் பயர்’ல எச்சில் துப்புற மாதிரி வேஸ்ட் தான்னு சொல்றாங்க…

*அரசாங்கம் என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அங்க?

நிறைய தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும்  தீ கட்டுப்படுத்துவத்திலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டுருக்காங்களாம்…

*காட்டுத்தீனு சொல்றிங்க வன விலங்குகள் என்னென்ன பாதிக்கப்பட்டு இருக்காம்?

ஆஸ்திரேலியா வில் வாழக்கூடிய வனவிலங்குகளில் 87% வகைகள் அந்நாட்டில் மட்டும் இருக்கக்கூடியவை… endemic speciesனு சொல்லுவாங்க.. தோராயமாக 500 மில்லியன் விலங்குகள் தீயில் கருகிவிட்டதா சொல்றாங்க..

குறிப்பாக Koala எனப்படும் ஒருவகை கரடி இனம், கங்காரு, brushtail போன்ற விலங்குகளும், பறவைகளும், பல்வேறு பூச்சியினங்களும் வெகுவாக அழிந்துவிட்டனவாம்.

சில வகைகள் (species) முற்றிலும் காணாமல் போகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

Koala என்ற உயிரினம் ‘functionally extinct ‘ ஆயிருக்கலாம்னும் சொல்றாங்க. 8000க்கும் அதிகமான koalas உயிரினங்கள் இறந்துடுச்சாம்…

இன்னும் உயிர்சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகமாக வாய்ப்பு இருக்காம்…

இதேப் போன்று நம் தமிழகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பற்றியும் அதனை கட்டுப் படுத்தும் முறை பற்றியும் இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள இதனைத் தொடவும்.


தொகுப்பு: ச. சரண்குமார். வனவியல் பட்டதாரி, தமிழ்நாடு வன உயர்பயிற்சியகத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது