. . .

Category: தமிழ்

பூ வாசத்திற்கும் பொங்கலுக்கும் என்ன தொடர்பு?

Thuvarai Kalanipoo pongal flower

  காவிரி டெல்டா மாவட்டங்களில் தாளடி நெல்லோ சம்பா நெல்லோ அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்நிலை முற்றிலும் மாறுபட்டு வயல்களில் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குழுங்கி கொண்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள சாலைகளில் நாம் பயணம் செய்யும் பொழுது ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் வயலில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள் செல்போனை பார்த்து எரிச்சலடைந்த நம் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும். இத்துடன் நம் ஹெட்செட்டில் ஒலித்து வரும் இளையராஜாவின் ஏலேலோ […]

நெற்பயிருக்கு மாற்றாக பாரம்பரிய பனிவரகு சாகுபடி

Kalanipoo kanthan panivaragu

  நம்முடைய முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தவை சிறுதானியங்கள்தான். நெல் சோறு சாப்பிடுவது மட்டுமே கெளரவமாக மாறிப்போன பிறகு திருவிழா, விருந்தினர் உபசரிப்பு என முக்கிய நாட்களில் மட்டும் நெல் சோறு சமைக்கப்பட்டது. காலப்போக்கில், விருந்தாலியாக வந்தவன் வீட்டுக்காரனை விரட்டிவிட்ட கதையாக, சிறுதானியங்களை புறந்தள்ளி முழுமையாக மனிதர்களை ஆக்கிரமித்துவிட்டது நெல். இதன் கூடவே, மனித உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களும் குடியேற ஆரம்பித்து விட்டன. விளைவு, மீண்டும் சிறுதானியங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.   […]

க்ளெரிஹியு (Clerihew) -அப்படியென்றால்!?

agri clerihew

  உலகில் மிகச் சிரமமான வேலை என்னவென்று நினைக்கிறீர்கள்? ஒரு வாரம் அலைபேசியை பயன்படுத்தாமல் இருப்பதா?! இல்லை அதைக்காட்டிலும் சிரமமானது மற்றவர் சொல்ல வருவதை கவனிப்பது தான், ஒரு கருத்தை மற்றவருக்கு பகிர வேண்டும், அது அவருக்கு புரிய வேண்டும், கருத்தை அவர் ரசிக்க வேண்டும், கருத்தின் பதிவு அவரது மூளையில் நிலையாகத் தங்க வேண்டும் அதே சமயத்தில் கருத்து சொல்லும் போது கேட்பவருக்கு அலுப்பு வராமல் பார்த்துக் கொள்வதும் கடமையாகிவிட்டது, அதற்காகத் தான் செய்யுள், சித்திரம், […]

வேளாண் ஹைகூ-நீங்களும் எழுதலாம்

kalanipoo haiku

  முதலில் ஹைகூ பற்றி பார்ப்போம்… மூன்றே வரிகளில் ஒரு சிறிய பூப்போல் கவிதைகள். உலகின் அத்தனை இலக்கியத்திலும் இந்த ஹைகூ வடிவம் இடம்பிடித்து எழுதப்படுகின்றன. ‘உலக ஹைகூ குழு’ என பல குழுக்கள் ஹைகூ ரசிகர்களுக்காக சிறப்பாக இயங்கி வருகின்றன, ஹைகூவுக்கு என்றே பத்திரிகைகளும் இருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழிலும் இந்த ‘ஹைகூ’ பிறக்க ஆரம்பித்துவிட்டது. திரு. சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் அக்டோபர் 16, 1916 அன்றே ‘ஜாப்பானிய கவிதைகள்’ என்ற தலைப்பில் […]

வேளாண் கலைச்சொற்கள்

ஒரு துறையைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலிருந்து தற்கால அறிவியல் போக்குக்கு ஏற்ப அமைப்பதற்கு ஒருவருக்கு அதனைப் பற்றிய தெளிவான அறிவு இருத்தல் வேண்டும். அந்த தெளிவான அறிவுக்கு துறை சார்ந்த தாய்மொழி அவசியம். அதற்காகவே கழனிப்பூவின் இந்த கலைச்சொற்கள் பகுதி…இப்போது தான் தொடங்கியுள்ளோம் வாரா வாரம் வார்த்தைகளை கூட்டிக்கொண்டே போவோம்…குறிப்பிட்ட காலத்தில் வேளாண் சார்ந்த கலைச்சொற்களை பெறுவதற்கு இந்தப் பகுதி கட்டாயம் உதவும் என்ற நம்பிக்கையில்…   Agriculture- வேளாண்மை, கமம், உழவு Apiculture- தேனீ […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது