. . .

Category: வேளாண்மை

படைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்!

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட படைப்புழு (American Fall Army worm – Spodoptera frugiperda) கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் மக்காசோளப் பயிரில் தாக்குதல் ஏற்படுத்தியது முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம், மகராஷ்டிரா மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் மக்காசோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்ததாக கடந்த டிசம்பர் (2018) மாதம் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியதை கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் வெளியிட்டது. […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்! இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். (எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் […]

போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்

kalanipoo dryflower

  நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா  இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், […]

தேனீக்கள் பற்றிய நீங்கள் அறியாத 7 அதிசயத் தகவல்கள்!

  1.மே 20 உலக தேனீக்கள் தினமாக ஐ நா அனுசரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய உணவாகும். தேனீக்கள் இல்லாமல் போனால் சில வருடங்களில் உலகம் அழிய நேரிடும் என ‘சேவ் தி பீஸ்’ (Save The Bees) என்ற கட்டுரையில் கிரீன் பீஸ் (Green Peace) நிறுவனம் தெரிவிக்கிறது.🐝 2.தேனீக்கள் வேகல் (waggle dance) நடனமாடி தங்களுக்குள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும். எவ்வளவு தூரத்தில் […]

இந்த மரம் வளர்க்கவில்லை என்றால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்..!

நல்ல மரம் வளர்ப்போம், அதுவும் நம்ம மரம் வளர்ப்போம்! “ஓர் அரசு, ஓர் வேம்பு, ஓர் ஆல், பத்து புளி, முக்கூட்டாக விளா, வில்வம், நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களை நடுவோர் நரகத்திற்கு போக மாட்டார்கள் ” என்று விருட்ச ஆயுர்வேதத்தில் 23 வது பாடலில் சுரபாலர் கூறியிருக்கிறார். மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் 27 மரங்கள் வரும். இது மரம் நடுவதன் அவசியத்தை 11ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்ததின் சான்று. இன்றும் நாம் மரம் […]