. . .

Author: Admin

25 வருடங்கள் வரை மகசூல் தரும் கருவேப்பிலை சாகுபடி

கருவேப்பிலை-kalanipoo

கருவேப்பிலை சாகுபடியில் செண்காம்பு, தார்வாடு1, தார்வாடு2 போன்ற ரகங்கள் உள்ளன. சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலம் கறிவேப்பிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. மிதமான வெப்பநிலை இருந்தாலே இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். கருவேப்பிலை சாகுபடிக்கு உகுந்த பருவம் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆகும். நிலத்தினை மூன்று அல்லது நான்கு முறை நன்கு பண்பட உழவு செய்ய வேண்டும். உழவு செய்த பிறகு நன்கு தொழு உரமிட்டு கடைசி உழவு செய்ய வேண்டும். 1.5 […]

நெற்பயிருக்கு மாற்றாக பாரம்பரிய பனிவரகு சாகுபடி

Kalanipoo kanthan panivaragu

  நம்முடைய முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தவை சிறுதானியங்கள்தான். நெல் சோறு சாப்பிடுவது மட்டுமே கெளரவமாக மாறிப்போன பிறகு திருவிழா, விருந்தினர் உபசரிப்பு என முக்கிய நாட்களில் மட்டும் நெல் சோறு சமைக்கப்பட்டது. காலப்போக்கில், விருந்தாலியாக வந்தவன் வீட்டுக்காரனை விரட்டிவிட்ட கதையாக, சிறுதானியங்களை புறந்தள்ளி முழுமையாக மனிதர்களை ஆக்கிரமித்துவிட்டது நெல். இதன் கூடவே, மனித உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களும் குடியேற ஆரம்பித்து விட்டன. விளைவு, மீண்டும் சிறுதானியங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.   […]

நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழு தொல்லையா? இதோ அதற்கான தீர்வு

  நெற்பயிரில் நடவு முதல் பூக்கும் பருவம் வரை இப்புழுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்புழு ஆங்கிலத்தில் லீப் போல்டர் (அ) லீப் ரோலர் (Cnaphalocrosis medinalis) என்று அழைக்கப்படும். இலையின் அடிப்புறத்தில் இப்புழுவின் முட்டைகள் மஞ்சள் வெள்ளை நிறத்தில் நேர்வரிசையாக காணப்படும். இப்புழுவின் முட்டைக் காலம் நான்கு முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். பின்பு, முட்டையில் இருந்து வெளிர்பச்சை நிற புழுக்கள் வெளியே வரும். அதாவது, இப்பூச்சியின் நான்கு பருவங்களில், முட்டைப் பருவம் முடிவடைந்து […]

வனத்துறை சார்ந்த எந்த மரத்தை வளர்க்கலாம்? எதை வளர்க்கக்கூடாது?

செம்மரம் செஞ்சந்தன மரம்

  “சந்தன மரம்” வளர்க்கலாமா? வேண்டாமா? வீடுகளில் அழகிற்காக கூட வளர்க்கக் கூடாதா? பள்ளிக்கூடம், தெருக்களிலும் கூட வளர்க்க முடியாதா? இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடையாக அமையப் போகிறது இந்தக் கட்டுரை.. வாருங்கள் வாசிப்போம்… சந்தன மரம், செம்மரம், தேக்கு என்றில்லை மற்ற எந்த மரங்களை வளர்க்கவும் நாம் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள், முதலாவது சந்தன மரம் செம்மரங்களைப் போன்று பல மரங்களை நாம் வளர்க்க அரசு தடை விதித்திருக்கிறது என்ற […]

அசோலா வளர்ப்பு- ஒரே கல்லில் இரண்டு மாங்கா!

Azolla kalanipoo

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று பலர் பேச்சு வழக்கில் பேசுவதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.  ஒரு செயல் செய்தால் அதில் பல பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உள்ளது. அதற்கு காரணம் பல்வேறு செயல்கள் செய்ய நேரமும் பொருளாதாரமும் போதிய அளவு இல்லாமல் இருத்தலே ஆகும். நம் எதிர்பார்ப்பிற்கினங்க அசோலா வளர்ப்பு மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவது மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாக விளங்குகிறது. அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது