. . .

அக்ரிடெக் ஸ்டார்டப் வளர்ச்சியில் முன்னோடியாக இந்தியா!

Nasscom -Agritech-kalanipoo

கவல் தொழில்நுட்ப துறையில் (IT-Information Technology) மட்டுமல்லாது இந்தியா தனது அக்ரிடெக் துறையிலும் எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டு வருகிறது. இதற்காக NASSCOM அமைப்பு இந்தியாவில் வேளாண்தொழில்நுட்பம்- வளர்ச்சியின் முன்னெடுப்பு  2019 (Agritech in India-Emerging Trends in 2019) என்ற தலைப்பில் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உலகளவில் 3100 அக்ரிடெக் ஸ்டார்டப்கள் இருக்கிறது என்றும் அதில் 450 ஸ்டார்டப்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்றும் ஆச்சரியப்படுத்தும் புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

  1. B2B (Business – Business) ஸ்டார்ட்-அப் முக்கிய வருவாய் ஈட்டும் பிரிவாக உள்ளது. அதில் அக்ரிடெக் பங்குதாரர் சார்ந்த சூழலை உருவாக்குவது.
  2. பொது – தனியார் கூட்டமைப்பை உருவாக்கி அதனை மேம்படுத்துவது.
  3. இந்தியாவில் அக்ரிடெக் ஸ்டார்ட் அப்களுக்கான (வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொடக்கநிலை தொழில் முனைவோர்) நிலையான வளர்ச்சியை கொண்டு வருவது.
NASSCOM என்பது 2800 உறுப்பினர்கள் உள்ள கம்பெனிகளை இந்தியா மற்றும் மேலைநாடுகளிலும் கொண்ட அமைப்பாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில்துறையில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தை உருவாக்குவதும். சர்வதேச மற்றும் உள்நாடுகளில் புதிய சந்தைகளை உருவாக்க வாய்ப்பளி்ப்பதாகும்.

அக்ரிடெக் துறையில் தற்போதய நிலை:

ஆண்டிற்கு 25% என்ற விகிதத்தில் வளரும் இந்தியாவில் தற்போது 450-கும் மேற்ப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் அக்ரிடெக் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. சென்ற சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள அக்ரிடெக் துறை சில உலகளாவிய மற்றும் துறை சார்ந்த நிதிகளை நேரடியாக அக்ரிடெக் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது. இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 2019-யில் அக்ரிடெக் துறை 248 மில்லியன் டாலர்களை (USD 248mn) பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 300% மிகப்பெரிய வளர்ச்சியாக கருதப்படுகிறது.

சமீப நிதி உயர்வை வைத்து, NASSCOM அமைப்பின் தலைமை குழுவின் கணக்கெடுப்பின்படி அடுத்த அக்ரிடெக் யுனிகார்ன் (Agritech unicorn) வரும் 3 வருடங்களிலே வரலாம் என 48% அக்ரிடெக் தலைமை நிர்வாக அதிகாரிகள்
நம்புகின்றனர்.

ஜூன் 2019-யில் அக்ரிடெக் துறை 248 மில்லியன் டாலர்களை (USD 248mn) பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 300% மிகப்பெரிய வளர்ச்சியாக கருதப்படுகிறது.

NASSCOM அமைப்பின் தலைவர் தேப்ஜனி கோஷ் (Debjani Ghosh) கூறுகையில், இந்தியாவின் வேளாண்மைத் துறை டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி சீராக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. இதனால் மிக முக்கியமான பகுதிகளில் தேவைப்படும் கண்டுபிடிப்புகளில் ஸ்டார்ட்-அப் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மையில் தொழில்நுட்பத்தை கொண்டுவர கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அக்ரிடெக் வேளாண்மை மற்றும் விவசாய நிலப்பரப்புகளில் இந்தியா வழங்கும் வாய்ப்புகளுக்கு சான்றாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என்றார்.

வேளாண்மையில் கொண்டுவரும் புதிய தொடக்கங்களை (start-ups) ஏற்றுக்கொள்ளும் உள்ளூர் விவசாயிகளால் தற்போது B2C லிருந்து (Business-consumer) B2B (Business-Business) ஸ்டார்ட்-அப்களில் கணிசமான மாற்றமடைந்துள்ளது.

B2B-start-up
நன்றி-sustainabilitynext.in

அதென்ன B2B மற்றும் B2C?

B2B என்றால் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் வணிகம் செய்வதாகும். இதன் மூலம் வணிக நிறுவனங்களுக்கு இடையே உறவை மேம்படுத்தலாம். இதனால் பெரிய அளவிலான பொருட்கள் விற்கப்படுகின்றன.

B2C என்றால் ஒரு நிறுவனம் நேரடியாக இறுதி நுகர்வோர்க்கு பொருட்களை விற்பனை செய்வது. இதன்மூலம் சிறிய அளவிலான பொருட்களே விற்கப்படுகின்றன.

அதனால் இந்தியாவில் அக்ரிடெக் ஸ்டார்டப் வளர்ச்சியானது இந்த B2B வளர்ச்சிக்கும் சரியான முன்னெடுப்பாக அமைவதால் வேளாண் உற்பத்திக்கு இலாபமும் அதிகரிக்கும்.

இந்தியாவில் அக்ரிடெக் ஸ்டார்ட் -அப்களின் முக்கியத்துவம்:

நிலம் பதப்படுத்துதல், வேளாண்மைக்குத் தேவையான உள்ளீடுகளில்(Inputs) இருந்து உற்பத்தியை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யும் வரை வேளாண் வளர்ச்சியில் அக்ரிடெக் ஸ்டார்டப்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

கடந்த 18 ஆண்டுகளாக 200 மில்லியன் டாலர்களை B2B ஸ்டார்ட்-அப்களில் முதலீடாக செலுத்தி B2B-யை அக்ரிடெக் துறையில் முக்கிய வருவாய் ஈட்டும் பிரிவாக உருவாக்கியதில் கார்ப்பரேட்டுகளும், முதலீட்டாளர்களும் முக்கியபங்கு வகிக்கின்றனர். இவை சந்தையை சிறந்த முறையில் அணுகுவதற்கும், தொழில்நுட்பத்தை மிக விரைவாக ஏற்றுகொள்வதற்கும், தொழிலில் குறிப்பிட்ட உற்பத்திக்கான வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது.

தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளை மையமாக கொண்டு உலகளாவிய சந்தைகளை விரிவாக்க இந்திய நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றன.

கடந்த 5 வருடங்களில் உலகளாவிய 5 பெரும் அக்ரிடெக் நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி வந்துள்ளது தனி சிறப்பு.

பொது-தனியார் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க ஆதரவுடன் பல இந்திய மாநிலங்கள் முற்போக்கான அக்ரிடெக் கொள்கைகளை நிறுவியுள்ளன.

இருப்பினும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு நிதிகள், புதிய மையங்களை திறத்தல், பல்கலைக் கழகங்களில் வேளாண்மை பாடத்திட்டத்தை மாற்றுதல், பெரிய திட்டங்களில் ஸ்டார்ட்-அப்களை ஈடுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தவதன் மூலம் எதிர்கால தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அக்ரிடெக் வளர்ந்து வருவதை ஆதரிக்கலாம்.

 

தொகுப்பு: சே.ஜனனிஇளங்கலை உயிரிதகவலியல் பட்டதாரிஇயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வமுடையவர்.

மின்னஞ்சல்sreejanani31@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது