. . .

தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு தேசிய அளவில் விருது

 

ஜனவரி 20-21, 2020 அன்று இந்திரா காந்தி கிரிஷி விஸ்வித்யாலயா, ராய்ப்பூரில் நடந்த தேசிய இளைஞர்கள் மாநாட்டில் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ. குமார் அவர்களுக்கு ஹரித் ரத்னா 2019 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

₹30 கோடி மதிப்புள்ள நிதியைக் கொண்டு வேளாண் தொழில் முனையும் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடச் செய்தமைக்காகவும், இளைஞர்களை வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த அதிக அளவில் பங்கு கொண்டதற்காகவும், தோட்டக்கலைத்துறையில் பல சிறந்த ஆராய்ச்சிகளை நடத்தியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Harit ratna 2019 Kumar vc

பல முன்னோடி திட்டங்களை மேற்கொண்டு தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தை சிறந்த வழியில் நடத்தி வரும் நீ. குமார் அவர்களை கழனிப்பூ வாழ்த்துகிறது. மேலும் வேளாண்மையில் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து சிறப்பிக்கவும் கழனிப்பூ வாழ்த்துகிறது.

கடந்த முறை இந்த ஹரித் ரத்னா 2018 விருது குஜராத்தில் உள்ள ஜூனாகாத் வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ. ஆர். பதக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது