. . .

தேனீக்கள் பற்றி நீங்கள் அறியாத 7 அதிசயத் தகவல்கள்!

 

1.மே 20 உலக தேனீக்கள் தினமாக ஐ நா அனுசரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய உணவாகும். தேனீக்கள் இல்லாமல் போனால் சில வருடங்களில் உலகம் அழிய நேரிடும் என ‘சேவ் தி பீஸ்’ (Save The Bees) என்ற கட்டுரையில் கிரீன் பீஸ் (Green Peace) நிறுவனம் தெரிவிக்கிறது.🐝

2.தேனீக்கள் வேகல் (waggle dance) நடனமாடி தங்களுக்குள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும். எவ்வளவு தூரத்தில் நீர், தேன் கொண்ட பூ, தேன் கூடு இவைகள் இருக்கிறது என அவைகள் நடனம் மூலம் பரிமாறிக்கொள்ளும். இதைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல் வான் ஃபிரிஸ்க்.🐝

3.வேலைக்கார தேனீக்கள் மழை நாட்களில் உணவுக்காக அமிர்தம் சேகரித்து தேனாக மாற்றும். தனது வாயைப் பயன்படுத்தி அமிர்தத்தில் உள்ள நீர் சதவீதத்தை 70% இருந்து 20% ஆக குறைத்து தேனாக மாற்றுகிறது. தேனீ வாய் படாத தேன் இல்லை!🐝

4.ஆண் தேனீக்கள் ( ட்ரோன்) இரணியுடன் இனவிருத்திகாக மட்டுமே இருக்கும்.🐝

5.ஆண் தேனீக்கு கொடுக்கு கிடையாது. அதற்கு பதிலாக இனவிருத்தி செய்யக்கூடிய உருப்பு இருக்கும். இனச்சேர்க்கையின் போது இராணி தேனீ வெளியில் வந்து உயரப் பறக்கும், அந்த இராணி தேனீக்கு இனையாகப் பல ஆண் தேனீக்களுல் போட்டி போட்டு எது ஒன்று உயரமாக பறக்கிறதோ அதுவே இராணி தேனீயுடன் இனை சேரும்.🐝

6.தேன் பற்றாக்குறையாக உள்ளபோது ஆண் தேனீக்களை மற்ற வேலைக்காரத் தேனீக்கள் விரட்டிவிடும்.🐝

7.மீண்டும் ஆண் தேனீக்கள் வேண்டுமென்றால் இராணி தேனீ உருவாக்கிக் கொள்ளும். வைத்திருக்கும் முட்டையை ஆண் தேனியாக மாற்றவோ அல்லது வேலைக்கார தேனியாக மாற்றவோ இராணி தேனீயால் முடியும்.🐝

 

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது