. . .

7 வித்யாசமான பிறந்தநாள் கிப்ட்- புதுமையானதும் இயற்கை சார்ந்ததும் !

kalanipoo birthday gift

 

போன பிறந்தநாளும் இது தானே கொடுத்தோம், இந்த முறை வித்யாசமாக என்ன கொடுப்பது? இந்த மாதம் பட்ஜெட் வேறு இல்லை என்ன செய்வது? பல பேர் இந்த பிறந்தநாள் ஃபோபியாவில் இருக்கிறார்கள்… அவர்களுக்கானது தான் இனி வருவது…

எப்போதும் கொடுக்கும் அதே கிப்ட்கள்

* உணவகத்தில் ஆடம்பர சாப்பாடு

* சினிமா

* பெரிய பெட்டியில் சாக்லேட்டுகள்.

* டீ கப்பில் அவர்களது படம்.

* கடிகாரம்- துணி- வகையாராக்கள்.

* போட்டோ ஃபிரேம்கள்

* இன்னும் சிலர் நாய்க்குட்டிகள், மீன் தொட்டிகள்.

 

பாவமாக இருக்கும் பரிசுகள்:

* புத்தர் சிலை –  சிலை வழிபாட்டையே எதிர்த்தவர் புத்தர்.

* போன்சாய் மரங்கள் –  ₹1000-க்கு எல்லாம் போன்சாய் கிடைக்காது, அவையெல்லாம் மரம் போல் வயதான தோற்றமளிக்கும் ஒரு செடி வகை (உண்மையில் போன்சாய் ₹25000 மேல் தான் நம்ம ஊரில் கிடைக்கிறது)

* டெடி கரடி – வீடு சுத்தம் செய்யும் போது அல்லது வெள்ளை அடிக்கும் போது சங்கடமாக இல்லையா?!

இவை அனைத்தும் கிமு வில் இருந்து எல்லோரும் எல்லோருக்கும் கொடுப்பது தான்,  வித்யாசமாக என்றால்?!!!! என்ன தான் கொடுப்பது?!!!

 

கிப்ட் எப்படி இருக்க வேண்டும்?!

* சிக்கனமானது

* கொஞ்சம் புதுமையானது

* மொய் கணக்கு போல் செய்ததற்காக செய்ய வேண்டும் என்று இல்லாமல் கொஞ்சம் நம் உழைப்புடன்

* ஒரு படி மேலாக- சுற்றுச்சூழல் உகந்ததாக

* கழனிப்பூ என்பதால் வேளாண் சார்ந்ததாக

1.முட்டைக்குள் செடி

kalanipoo egg plant

* பெயரே தெரியாத ஏதோ ஒரு பூவே பூக்காத செடியை ₹200 ₹300 என்று வாங்கி கொடுப்பதற்கு பதிலாக இதை கொடுக்கலாம்.

* பிறந்த நாட்களுக்கு 4 நாட்களுக்கு முன்பு விதை போட்டாலே துளிர் விட்டுவிடும்.

* முட்டையில் சிறிதளவு மண் நிரப்பி, முயற்சித்து பாருங்கள். அழகாக இருக்கும்.

* நன்றாக வளரக்கூடிய வேப்பம் விதை, புளிய விதையிலிருந்து கொத்துமல்லி வரை இதில் போட்டு பரிசளிக்கலாம்.

* அதை மண்ணில் அப்படியே ஊன்றி விட்டாலும் முட்டை ஓடு மக்கிவிடும்.

2.குடைமிளகாயில் செடி

kalanipoo gift

* முன்பு முட்டைக்கு சொன்னதை அப்படியே குடை மிளகாயையும் ஒரு பகுதியை அறுத்து  முயற்சிக்கலாம். பச்சை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களில் பளிச்சிடும் உங்கள் குடை மிளகாய்ச் செடி…

கண்டிப்பாக அவர்களை கவரும்…

3.பாதாம் மரத்தின் பழத்துடன் பருப்பு சேர்ந்த பரிசு

kalanipoo gift

* இந்திய பாதாம் மரம் பார்த்திருப்பீர்கள், பல பேர் சிறு வயதோடே இந்த மரத்தை மறந்திருப்பார்கள்…

* இதன் பருப்பு இப்போது கடையில் விற்கும் பாதாம் பருப்பை விட ருசி அதிகம்…

* பழத்தின் மேல் பகுதியையும் சாப்பிடலாம்…

* பழத்துடன் அதன் படகு போன்ற இலையைச் சுருட்டி பருப்பை எடுத்து மடித்து கொடுக்கலாம், ஒன்றிரண்டு செம்பருத்திகளோடு…

4.பனை ஓலையில் கடிதம்

kalanipoo gift

* ‘நண்பனுக்கு கடிதம்’ பள்ளியில் கடைசியாக விவரம் தெரியாமல் எழுதியது… இப்போது எழுதிப் பாருங்கள்…

* சாலையோரத்தில் எங்கும் எளிமையாக கிடைக்கும்…

* கவிதை தான் எழுத வேண்டிய அவசியம் இல்லை… தோன்றுவதை எழுதிக் கொடுங்கள் போதும்…அழகான நினைவாக இருக்கும்…

5.டெய்ரி மில்க்குக்கு பதிலாக நொங்கு

kalanipoo gift

* ஒரு இளநீர் வெட்டி அதனுள் நொங்கைப் போட்டு கொடுத்துப்பாருங்கள்…

* டெய்ரி மில்க்குக்கு இது நிச்சயம் நல்ல மாற்றாக இருக்கும்.

kalanipoo gift

* சென்னையில் பல இடங்களில் ‘டெண்டர் கோக்கநட் நொங்கு’ கிடைக்கிறது… அதை இன்னும் உயிர்ப்புடன் இளநீர் குடுவையுடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்…

* ஏன் நொங்கில் வண்டி செய்து கூட கொடுக்கலாம், உங்களுக்கு நேரமிருந்தால்…

6.தென்னை மர ஓலையில் பரிசுகள்

kalanipoo gift

* பெட்டி, பாம்பு எல்லாம் இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம்…

*மிக அழகான பரிசாக இருக்கும்… மிகவும் எளிமையான பரிசு…

* YOUTUBE  இரண்டு நிமிடம் வீடியோவிலேயே இதைச் செய்யக் கற்று கொள்ளலாம்…

 

7.கேக்குக்கு பதிலாக தர்பூசனியை வெட்டுங்கள்!

 

* பிறந்த நாளைக்கு கேக்கு தான் வெட்ட வேண்டும் என்று யார் சட்டம் போட்டது? 

* தர்பூசனியை நான்கில் ஒரு பங்காக வெட்டி எடுத்து அதை கேக் போல் வெட்ட வைக்கலாம்…

* அதே தர்பூசனியுடன் ஒன்றிரண்டு மாதுளைகளை சேர்க்கலாம், இயற்கை நமக்குத் தந்த எவ்வளவு அழகான பரிசு…

* குளிர்ச்சியான பிறந்தநாள்…

* இன்னொன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை தான் ஆரோக்கியமான ஒருவரே எடுத்துக் கொள்ள வேண்டுமாம், WHO ( சர்வதேச உடல்நல அமைப்பகம்) சொல்கிறது, கேக் முழுவதும் சர்க்கரை தான்…

 

‘காதலன்’ படத்தில் வரும் பிரபுதேவா போல காட்டில் கிடைக்கும் பல பொருள்களை சேகரத்தி சாப்பிட கொடுப்பதென்பதெல்லாம் கொஞ்சம் அலச்சல் தான்… முடிந்தால் அதையும் முயற்சிக்கலாம், இவை எதுவுமே முடியவில்லையென்றால் எப்போதும் போல வாட்ஸப்பில் மொய் கணக்கை தீர்த்துக்கொள்ளலாம்…

உங்களுக்கும் இதே போல் வித்யாசமான உயிர்ப்புடன் பரிசுகள் தோன்றினால் கமண்டில் பதிவிடுங்கள்… 


ஆக்கம்: சா.கவியரசன், கு.உத்தண்ட காளை ராஜ்