. . .

2018-19 இல் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் அதிகமா குறைவா?

 

வெங்காயம் உற்பத்தி பாதிப்பு, கர்நாடகத்தில் புயல், குஜராத் மகாராஷ்டிராவில் மஹா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புல்புல் புயல் இத்தனை இருக்க 2018-19 தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி போன வருடத்தை ஒப்பிடும் போது எப்படி இருந்தது?

அதிகமாகத் தான் இருந்தது!.

ஆம், தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் 2017-18 ஆண்டை ஒப்பிடும் பொது 2018-19 இல் அதிகமாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது 310 மில்லியன் டன் விளைச்சலாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் காய்கறிகள், மருத்துவச் செடிகள், நறுமனப் பயிர்கள் அனைத்தும் 2017-18ஐ ஒப்பிடும் போது விளைச்சல் குறைவாகவே உள்ளது, இருந்த போதும் பழங்கள், மலர்கள், தேன் போன்றவற்றின் உற்பத்தி அதிகமானதால் மொத்தமாக தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் அதிகமாக கணக்காகியுள்ளது.

வெங்காயம், தக்காளி, உருளை ஆகியவற்றின் விலை முறையே 22.82 மில்லியன் டன், 19 மில்லியன் டன், 50.19 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்தாண்டை ஒப்பிடுகையில் குறைந்திருக்கிறது.

 

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது